Connect with us

Raj News Tamil

பாஜக தேர்தல் பத்திரம் மூலம் ஊழல் செய்தது அம்பலமாகியுள்ளது

அரசியல்

பாஜக தேர்தல் பத்திரம் மூலம் ஊழல் செய்தது அம்பலமாகியுள்ளது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களை சந்தித்தார்.

சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற பாஜகவின் ஊழல் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் வெளி வந்துள்ளது. உலகில் எந்த நாட்டிலும் இதுவரை இல்லாத அளவிற்கு பாஜகவின விஞ்ஞான ஊழல் செய்துள்ளது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளது.

பாஜக இந்த மெகா ஊழலில் தப்பிக்க முடியாது. ஒரு மணி நேரத்தில் கொடுக்க வேண்டிய தகவல்களை ஜூன் 30 வரை எஸ்பிஐ ஏன் அவகாசம் கேட்டது என அம்பலமாகி உள்ளது. பாஜகவும் மோடியும் செய்த ஊழல் மக்களுக்கு தெரிந்து விடும் என்பதால் எஸ்பிஐ, தேர்தல் ஆணையமும் வாய்தா கேட்டது. ஜனநாயகம் இன்னும் செத்துப்போகவில்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளது.

வரலாறு காணாத அளவில் பாஜக செய்து வந்த ஊழல் உச்சநீதிமன்றம் மூலம் வெளிவந்துள்ளது. விஞ்ஞான முறையில் ED IT வைத்து பாஜக மிரட்டி ஊழல் செய்து வருகிறது என ராகுல் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசி வந்தார்.

யார் யாரிடம் இருந்து யார் இந்த தேர்தல் பத்திரம் பெறப்பட்டது என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் வரை SBI கால அவகாசம் கேட்டது. பாஜக ஊழல் வெளியே வந்துவிடும் என்ற அச்சம் என்பது தெளிவாகிறது.

SBI, தேர்தல் ஆணையம் மூலம் அவகாசம் கேட்டவர்கள் மேலும் அம்பலம் ஆகிவிடுவோம் என்பதால் தற்போது வெளியிட்டுள்ளனர். தேர்தல் பத்திரம் மூலம் 500 கோடி ரூபாய் turn over உள்ள நிறுவனம் எப்படி 1386 கோடி ரூபாயை பாஜக விற்கு வழங்க முடியும். தமிழ்நாடு வரும் மோடி இதுகுறித்து விளக்க வேண்டும். தமிழ்நாட்டை காட்டிகுடுக்கும் எட்டப்பனாக உள்ள அண்ணாமலை இதுகுறித்து விளக்க வேண்டும்

IT, ED வைத்து மிரட்டி மாமூல் வாங்குவது போல தேர்தல் பத்திரத்தை பாஜக பெற்றுள்ளது. Hero motors, avon cycle நிறுவனம் raid நடத்தப்பட்டதும். தேர்தல் பத்திரம் வழங்கியுள்ளனர். Dr. reddy lab raid நடந்ததற்கு பிறகு தேர்தல் பத்திரம் வளங்கியுள்ளது. மேகா இன்ஜினியரிங் நிறுவனம் பாஜகவிற்கு 100 கோடி ரூபாய் கொடுக்கிறது. அதன் பின்னர் அந்த நிறுவனத்திற்கு சுரங்க சாலை அமைப்பதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

புல்வாம தாக்குதல் நடத்தி 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அப்பேற்பட்ட தாக்குகுதலுக்கு காரணமான பாகிஸ்தான் நாட்டில் உள்ள Hub power நிறுவனத்திடம் இருந்து பாஜக பணம் பெற்றுள்ளது. பாஜக, மோடியின் உண்மையான தேசபக்தி என்ன என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது. தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்.

தேர்தல் நிதியாக எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுக, திமுக, காங்கிரஸ் என அனைத்து கட்சியும் வாங்கியுள்ளனர். ஆனால் பாஜக ED IT துறையை மிரட்டி பாஜக நிதி பெற்றுள்ளது. அந்நிய நாடுகளில் இருந்து ஏன் பாஜக நிதி பெற்றுள்ளது. நாட்டிற்கு எதிரான சக்தியிடம் இருந்து பாஜக ஏன் நிதி பெற்றுள்ளது என விளக்கம் வேண்டும் என அவர் பேட்டி அளித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top