Connect with us

Raj News Tamil

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை இன்று திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகம்

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை இன்று திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

வி.பி.சிங். என்று அனைவராலும் அறியப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங் 1931 ஜூன் 25 ஆம் தேதி, உ.பி., மாநிலம் அலகாபாத் நகரில் பிறந்தார். காந்திய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட இவர் சர்வோதய சமாஜத்தில் இணைந்து, பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து, தன் நிலங்களை தானமாக வழங்கினார்.

இவர் பிரதமராக இருந்தபோது, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்ப்பாயம் அமைத்து தந்தார். சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணாதுரை பெயரையும் சூட்டினார்.

அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அரசுப் பணியிடங்களில், 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற பரிந்துரையை வி.பி.சிங் செயல்படுத்தினார்.

இத்தகைய சிறப்புமிக்க முன்னாள் பிரதமர் வி.பி.சிங்.,கிற்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழக அரசு சார்பில் சென்னையில் சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் புதிதாக வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ள வி.பி.சிங் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.

இந்த விழாவில், உத்திர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் வி.பி.சிங் குடும்பத்தினர், தமிழக அமைச்சர்கள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க உள்ளனர்

More in தமிழகம்

To Top