Connect with us
Raj News Tamil

Raj News Tamil

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய முதலமைச்சரின் வாகனம் – நடந்து சென்ற முதலமைச்சர்

இந்தியா

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய முதலமைச்சரின் வாகனம் – நடந்து சென்ற முதலமைச்சர்

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி, உள்ளிட்ட வீதிகளில் மக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் புதுச்சேரியில் ஆடை ஆபரணங்கள் வாங்க குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேரு வீதியில் உள்ள வாட்ச் கடை ஒன்றில் முதலமைச்சர் அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கமாக இருக்கும். இந்த நிலையில் இன்று வாட்சி கடைக்கு வருவதற்காக முதலமைச்சர் ரங்கசாமி நேரு வீதியில் காரில் வந்தார். அவரது கார் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. இதனை அறிந்த அவர் காரை விட்டு இறங்கி கடைவீதியில் இருந்து நடந்தே வாட்சி கடைக்கு சென்றார்.

அப்போது வழியில் பார்த்தவர்கள் எல்லாம் அவருக்கு தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள் பதிலுக்கு முதலமைச்சரும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

More in இந்தியா

To Top