Connect with us

Raj News Tamil

இந்தியாவின் கலாச்சாரத்தை எதிர்க்கும் கட்சி காங்கிரஸ்: அமித் ஷா!

இந்தியா

இந்தியாவின் கலாச்சாரத்தை எதிர்க்கும் கட்சி காங்கிரஸ்: அமித் ஷா!

இந்தியாவின் கலாச்சாரத்தை எதிர்க்கும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

“மத்தியப் பிரதேச வாக்காளர்களுக்கு இம்முறை 3 தீபாவளியைக் கொண்டாடும் வாய்ப்பு கிட்டியுள்ளது. நாளைய தினம் நாட்காட்டிப் படியான தீபாவளியை நீங்கள் கொண்டாடுவீர்கள். இரண்டாவது தீபாவளி, மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் நாளான டிசம்பர் 3-ம் தேதி. பாஜகவின் வெற்றி அன்று உறுதியாகும் என்பதால், அந்த தினமும் மத்தியப் பிரதேச மக்களுக்கு தீபாவளித் திருநாளாக இருக்கும். மூன்றாவது, தீபாவளி… அயோத்தியில் ராமர் தனது ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நாளான ஜனவரி 22-ம் தேதி. அதுவும் தீபாவளிக்குரிய கொண்டாட்ட தினமாக நிச்சயம் இருக்கும். எனவே, இம்முறை உங்களுக்கு 3 தீபாவளி காத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சி காலம் காலமாக நமது கலாச்சாரத்தை அவமதித்து வருகிறது. ஒருபுறம், நமது நாட்டின் கலாச்சார அடையாளங்களைப் புதுப்பிக்கும் பணியினை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார். மறுபுறம், அதனை எதிர்க்கும் செயலை காங்கிரஸ் கட்சி மேற்கொள்கிறது. மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ராஜா போஜ் பெயரை வைக்க பாஜக அரசு முடிவு செய்தபோது, அதனை காங்கிரஸ் எதிர்த்தது. சாகரில் மகான் ரவிதாஸுக்கு கோயில் கட்ட பாஜக முயன்றபோது, அதனையும் காங்கிரஸ் எதிர்த்தது. இதன்மூலம், இந்தியாவின் கலாச்சாரத்தை எதிர்க்கும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது” என்று அமித் ஷா பேசினார்.

More in இந்தியா

To Top