Connect with us

Raj News Tamil

டெல்லி பனிப்பொழிவு எதிரொலி! – ரயில்சேவைகள் கடும் பாதிப்பு!

இந்தியா

டெல்லி பனிப்பொழிவு எதிரொலி! – ரயில்சேவைகள் கடும் பாதிப்பு!

வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுவதால் அங்கு ரெயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகளின் சேவை, விமான சேவைகள் தடைப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன

இந்நிலையில், கடுமையான பனிப்பொழிவால் இன்று டெல்லிக்கு வரும் ரெயில்கள் சற்று தாமதமாக வந்தடையும் என இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் உட்பட 26 ரெயில்கள் அதிகபட்சமாக 6மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

More in இந்தியா

To Top