Connect with us

Raj News Tamil

அண்ணனுக்கு பாடம் எடுக்கும் தம்பி! சுளுக்கெடுக்க ரெடியாகும் தனுஷ்!

சினிமா

அண்ணனுக்கு பாடம் எடுக்கும் தம்பி! சுளுக்கெடுக்க ரெடியாகும் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில், துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் ஆகிய 5 படங்களில், தனுஷ் நடித்துள்ளார்.

தனுஷ் ஒரு நல்ல நடிகராக இருப்பதற்கு, செல்வராகவனும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு நடிப்பு தொடர்பாக, பல்வேறு நுனுக்கங்களை தனுஷ் தனது அண்ணனிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு இருக்க, தனது அண்ணனுக்கே பாடம் எடுக்கக் கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதாவது, பன்முகத் திறமைக் கொண்ட தனுஷ், பா.பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர், தற்போது இன்னொரு படத்தை இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இதுவரை, விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க இருப்பதாக, கூறப்பட்டு வருகிறது. இந்த லிஸ்டில் தற்போது, செல்வராகவனும் இணைந்துள்ளார்.

ஆம், தனுஷ் இயக்க இருக்கும் புதிய படத்தில், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். தனது திரைப்படத்தில் தனுஷ் நடிக்கும்போது, செல்வராகவன் பெண்டை நிமிர்த்தியிருப்பார். ஆனால், தற்போது, தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன் நடிக்க உள்ளார். இதனை பார்க்கும்போது, காலம் ஒரு வட்டம் என்று தளபதி விஜய் சொன்ன வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top