Connect with us

Raj News Tamil

இது என்னோட மண் ஒரு பிடி கூட எடுக்க முடியாது…போஸ்டர் ஒட்டி பாஜகவை மிரள விட்ட திமுக

அரசியல்

இது என்னோட மண் ஒரு பிடி கூட எடுக்க முடியாது…போஸ்டர் ஒட்டி பாஜகவை மிரள விட்ட திமுக

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண்.. என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தை இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்க உள்ளார். சுமார் 6 மாத காலம் நடைபெறவுள்ள இந்த நடை பயணம் சென்னையில் ஜனவரி 11 ஆம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில் அண்ணாமலையின் நடை பயணத்தை திமுகவினர் விமர்சனம் செய்யும் வகையில் கோவையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் “இது என்னோட மண் ஒரு பிடி மண்ணக்கூட எடுக்க முடியாது” என காலா படத்தில் ரஜினி கூறிய வசனம் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு சட்டை அணிந்து முதலமைச்சர் ஸ்டாலின் அமர்ந்து இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in அரசியல்

To Top