Connect with us

Raj News Tamil

தளபதி விஜய் யாருடைய fan தெரியுமா..? – வெங்கட் பிரபு

சினிமா

தளபதி விஜய் யாருடைய fan தெரியுமா..? – வெங்கட் பிரபு

தளபதி68 படத்திற்காக விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். அங்கு, 3டி வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பம் விஜயை ஸ்கேன் செய்யும் புகைப்படத்தை வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மேலும் ஒரு புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
ஹாலிவுட் மூவியான Equalizer3 படத்தின் first day first show-வில் நடிகர் Denzel Washington-இன் fan ஆக தளபதி விஜய் எழுந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு விஜய் அண்ணாவின் fan boy மூமென்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற ஒரு புகைப்படத்தை இதுவரை விஜயின் ரசிகர்கள் பார்த்தில்லாததால் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top