Connect with us

Raj News Tamil

காலையிலேயே டாஸ்மாக் கடை திறக்க திட்டமா? அமைச்சர் சு. முத்துசாமி பேட்டி!

அரசியல்

காலையிலேயே டாஸ்மாக் கடை திறக்க திட்டமா? அமைச்சர் சு. முத்துசாமி பேட்டி!

சென்னை: காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அமைச்சர் சு. முத்துசாமி கூறியுள்ளார்.

வீட்டுவசதி, நகர்ப்புறம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், டெட்ரா பேக்கில் மதுபானம் விற்கப்படுவதை மதுப் பிரியர்கள் விரும்புகிறார்கள். டெட்ரா பேக்கில் மதுபானம் விற்கப்படுவதை அறிமுகப்படுத்தினால், பாட்டில் பயன்பாடு குறையும் என்றும் கருதப்படுகிறது.

காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை வந்துள்ளது. இந்த கோரிக்கைகள் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆலோசனை மட்டும் மேற்கொள்ளப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டெட்ரா பேக்-குகளில் மதுபானத்தை விற்பனை செய்யும் திட்டமும் டாஸ்மாக் நிறுவனத்திடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியான சில நாள்களில், சுற்றுச் சூழலையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்ட பாட்டில் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் இந்த டெட்ரா பேக் பயன்பாடு அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பதாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் டெட்ரா பேக்-குகளில் மதுபானம் விற்கப்படும் நிலையில், தமிழகத்திலும் இதனை செயல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒரு குழு விரைவில் இவ்விரு மாநிலங்களுக்கும் சென்று, இந்த பயன்பாடு குறித்த நடைமுறைகளை ஆய்வு செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More in அரசியல்

To Top