Connect with us
Raj News Tamil

Raj News Tamil

பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி பேட்டி

அரசியல்

பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பின் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக அடிமையாக உள்ளது.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம்தான். அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டை வைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை. வரப்போகும் மக்களவை தேர்தலில் 330 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் என அவர் பேசியுள்ளார்.

More in அரசியல்

To Top