Connect with us

Raj News Tamil

5 மாநில தேர்தல்! வெல்லப்போவது யார்? வெற்றி-தோல்வி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?

அரசியல்

5 மாநில தேர்தல்! வெல்லப்போவது யார்? வெற்றி-தோல்வி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள், வரும் நாடாளுமன்ற தேர்தலில், எதிரொலிக்கும் என்பதால், பாஜகவும், கங்கிரஸ் கட்சியும், தேர்தலில் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை எடுக்க முயற்சி செய்து வருகின்றன.

இவ்வாறு இருக்க, இன்று மதியம் 12 மணிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், மனுதாக்கல் செய்வதற்கான தேதி, மனுதாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, பிரச்சாரம் செய்வதற்கான தேதி, அதன் கடைசி தேதி என்ன?, தேர்தல் நடைபெறும் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி ஆகியவை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தின் ஆட்சிக்காலம், வரும் டிசம்பர் மாதம் முதல் முடிவடைய உள்ளது.

90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர், 230 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசம், 200 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான், 119 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தெலங்கானா ஆகிய 4 மாநிலத்திற்கும், வரும் ஜனவரி மாதம் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளது.

எனவே, இந்த 5 மாநிலத்திற்கான தேர்தல், நவம்பர் கடைசி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மட்டும் இரண்டு கட்டங்களாகவும், தேர்தல் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More in அரசியல்

To Top