Connect with us

Raj News Tamil

மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!

இந்தியா

மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!

டெல்லியில் பைரோன் மார்க் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. ஜி20 உச்சி மாநாடு, டெல்லியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. உலகின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவிருப்பதால், இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் அருகே ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்சார ரயில் தடம் புரண்டதில் ஒரு பெட்டி கடும் சேதமடைந்துள்ளது.

ரயில் தடம் புரண்டதை அடுத்து ரயிலில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in இந்தியா

To Top