Connect with us
Raj News Tamil

Raj News Tamil

நீச்சல் குளத்தில் மின்சார கசிவு! – 9 வயது சிறுமி பலி!

இந்தியா

நீச்சல் குளத்தில் மின்சார கசிவு! – 9 வயது சிறுமி பலி!

கர்நாடகா பெங்களூருவில் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் மான்யா(9) என்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, உயிரிழந்த சிறுமியின் சடலத்தை போலீஸார் மீட்டு கொண்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று இரவு 7.30 மணி அளவில் சிறுமி மான்யா நீச்சல் குளத்தின் அருகில் நண்பர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, பந்தானது நீச்சல் குளத்தில் விழுந்துள்ளது.

பந்தை எடுக்க அவர் முயற்சிக்கும் போது குளத்தினுள் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகளில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக நீரை சிறுமி தொட்டவுடன் மின்சாரம் தாக்கி மான்யா உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top