Connect with us

Raj News Tamil

தீபாவளி பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து!

தமிழகம்

தீபாவளி பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து!

தீபாவளி பண்டிகைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி கே.பழனிசாமி (எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர்)

“மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்:

உலகில் மண்டிக் கிடக்கும் இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி (தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்)

மோடி ஆட்சியில் 10 ஆண்டு காலம் மக்கள் பட்ட இன்னல்கள் முடிவுக்கு வர இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நாடே இருக்கும் நிலையில், இந்த தீபாவளி சிறப்பு வாய்ந்ததாகும். நாடு முழுவதும் இந்த நம்பிக்கை பரவிக்கிடப்பது மக்களின் எழுச்சியைப் பார்க்கும் போது தெரிகிறது. அடுத்த ஆண்டு மலரப்போகும் நல்லாட்சிக்கான கொண்டாட்டமாக இந்த தீபாவளி அமையட்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்):

மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்):

மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்):

சாதி, மத பாகுபாடுகளை கடந்து ஒற்றுமை உணர்வை மக்கள் மனதில் ஏற்றும் ஒளியாகவும் இந்த தீபாவளி திருநாள் அமைய, மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்”

ஜி.கே. வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்):

இந்நன்னாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும், அனைவருக்கும் தமிழ் மாநில காங்கிரஎர் சார்பாக தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்”

More in தமிழகம்

To Top