Connect with us

Raj News Tamil

சென்னையில் கனமழை: 8 விமானங்கள் ரத்து; 15 விமானங்கள் தாமதம்!

தமிழகம்

சென்னையில் கனமழை: 8 விமானங்கள் ரத்து; 15 விமானங்கள் தாமதம்!

சென்னையில் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், 15 விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டுச்சென்றன.

சென்னையில் நேற்று (புதன்) இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பாய்ந்தோடுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள்ளும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், 8 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

மேலும், சென்னையில் இருந்து செல்லக்கூடிய அந்தமான், ஹைதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 15 விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டுச்சென்றன.

More in தமிழகம்

To Top