Connect with us

Raj News Tamil

விஜயால் பிரபலமடைந்த ஹாலிவுட் ஹீரோ..!

சினிமா

விஜயால் பிரபலமடைந்த ஹாலிவுட் ஹீரோ..!

தளபதி68 படத்திற்காக விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். அங்கு, 3டி வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பம் விஜயை ஸ்கேன் செய்யும் புகைப்படத்தை வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து, ஹாலிவுட் படமான Equalizer3 படத்தை விஜயுடன் வெங்கட் பிரபு திரையரங்கில் கண்டுகளித்துள்ளார். அப்போது ஹாலிவுட் நடிகர் Denzel Washington-இன் காட்சியின் போது ஒரு fan ஆக தளபதி விஜய் எழுந்து நின்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் அண்ணாவின் fan boy மொமென்ட் என்ற கேப்ஷனுடன், வெங்கட் பிரபு வெளியிட்டுயிருந்தார்.

இதனையடுத்து, யார் அந்த Denzel Washington என்று பலரும் தேட ஆரம்பித்தனர். இந்நிலையில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஹாலிவுட் நடிகர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் Denzel Washington.

More in சினிமா

To Top