Connect with us

Raj News Tamil

அயலான் படம் எப்படி இருக்கு..? – ரசிகர்களின் கருத்து என்ன..?

சினிமா

அயலான் படம் எப்படி இருக்கு..? – ரசிகர்களின் கருத்து என்ன..?

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், இன்று திரையருங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில், படம் ஃப்ரஷ்ஷாக உள்ளதாகவும், முதல் பாதி மிகவும் அருமையாக உள்ளது என்றும் கூறியுள்ளனர். இதுவரை பாசிட்டிவ் விமர்சனங்களை மட்டுமே இப்படம் பெற்று வருகிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் புதிய கதையம்சம் கொண்ட ஒரு நல்ல பொழுதுபோக்கான திரைப்படம் என்று தெரியவந்துள்ளது.

More in சினிமா

To Top