Connect with us

Raj News Tamil

ரிஸ்க் பெருசுல… அப்போ சம்பளமும் பெருசால இருக்கனும்..! – கங்குவாவில் சூர்யாவிற்கு இத்தனை கோடியா..!!!

சினிமா

ரிஸ்க் பெருசுல… அப்போ சம்பளமும் பெருசால இருக்கனும்..! – கங்குவாவில் சூர்யாவிற்கு இத்தனை கோடியா..!!!

பார்க்க சைலண்டாக இருந்தாலும் மக்கள் மனதில் ஸ்டராங்காக இடம் பிடித்திருப்பவர் நடிகர் சூர்யா. படத்தின் கதைக்கேற்ப தன்னையே மாற்றிக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்.

இந்நிலையில், கங்குவா படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. அதாவது, இந்த படத்தில் சூர்யாவிற்கு 3 கெட்டப் என்பதால், மேக்கப்பிற்காகவே பல மணி நேரம் செலவானது என்றும், சண்டைக்காட்சிகளிலும் இவர் ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதையடுத்து, 30 முதல் 40 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சூர்யா, இந்த படத்திற்காக 50 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நேற்று வெளியான இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ 24 மணி நேரத்தில் 2.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top