Connect with us

ஜெயிலர் படக்குழுவின் அடுத்த சர்ப்ரைஸ்!

சினிமா

ஜெயிலர் படக்குழுவின் அடுத்த சர்ப்ரைஸ்!

ஜெயிலர் படம் வரும் ஆகஸ்டு 10-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரிலீசுக்கு சில நாட்களே இருப்பதால், படத்தை புரமோஷன் செய்வதற்கு, படக்குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, காவாலா, டைகரின் கட்டளை ஹிக்கும் ஆகிய பாடல்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், 3-வது சிங்கில் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஜூஜுபி என்ற பாடல், இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாம். சந்தோஷ் நாராயணனின் மகள் தீ பாடிய இந்த பாடலை, சூப்பர் சுப்பு என்பவர் எழுதியுள்ளார்.

ரஜினி பேசும் வசனங்களில் ஒன்றாக உள்ள ஜூஜுபி-யை கொண்டு, இந்த பாடல் உருவாக இருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top