Connect with us

Raj News Tamil

விஜய்க்கு தக்காளி சட்னி… கார்த்திக்கு வந்தா ரத்தமா?

சினிமா

விஜய்க்கு தக்காளி சட்னி… கார்த்திக்கு வந்தா ரத்தமா?

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவிருந்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில காரணங்களால் ரத்தானது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், கார்த்திக்கின் 25வது படமான ஜப்பான் திரைப்படத்தின் இசைவெளியீட்டுவிழாவும் நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி கார்த்திக்கு வந்தா ரத்தமா என்ற மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய் மற்றும் கார்த்திக் இருவரையும் ஒப்பிடுகையில் கார்த்திக்கிற்கு ரசிகர் கூட்டம் குறைவு என்பதாலேயே நேரு உள்விளையாட்டு அரங்கில் அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

More in சினிமா

To Top