Connect with us

Raj News Tamil

கேரளாவில் மாஸ் காட்டும் தளபதி விஜய்..ஜெயிலரை முந்திய ‘லியோ’

சினிமா

கேரளாவில் மாஸ் காட்டும் தளபதி விஜய்..ஜெயிலரை முந்திய ‘லியோ’

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஜெயிலர் படத்தின் கேரள தியேட்டர் உரிமம் ரூ. 9 கோடிக்கு சென்றிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் கேரள தியேட்டர் உரிமை ரூ. 16 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. லியோ உரிமையை வாங்கிய அதே நபர் தான் ஜெயிலர் தியேட்டர் உரிமையையும் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் அதிக விலைக்கு போன தமிழ் படமாக ரஜினியின் 2.0 இருந்தது. அந்த சாதனையை விஜய்யின் லியோ முறியடித்தது. லியோவின் சாதனையை ஜெயிலர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லியோவை விட ஜெயிலர் குறைவான விலைக்கு சென்றுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top