Connect with us

Raj News Tamil

லியோ , விடா முயற்சி வரிசையில் ‘தி ரோடு’ – நடிகை த்ரிஷா

சினிமா

லியோ , விடா முயற்சி வரிசையில் ‘தி ரோடு’ – நடிகை த்ரிஷா

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸ்ஸை நடிகை த்ரிஷா தொடங்கியிருக்கிறார். இதனை தொடர்ந்து லியோ, விடா முயற்சி போன்ற பெரிய பட்ஜெட் படங்களிலும் பிஸியாக இருக்கிறார்.

இது மட்டுமின்றி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘தி ரோடு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ‘தி ரோடு’ படமானது மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்று இப்படத்தின் இயக்குனர் அருண் வசீகரன் தெரிவித்துள்ளார். இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top