Connect with us

Raj News Tamil

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது!

தமிழகம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது!

மதுரை சித்திரை திருவிழாவின் பதினோறாம் நாளான இன்று மதுரை மீனாட்சி அம்மனின் திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 6.30 மணிக்கு துவங்கிய இந்த திருத்தேரோட்டத்தில் “நகரும் கோயில்” என்று தேர்கள் இடம் பெற்று வருகின்றன.

எல்லா உற்சவ நாட்களிலும் கோயிலின் நடை திறக்கப்பட்டு இருக்கும். ஆனால் திருத்தேரோட்டம் அன்றைக்கு மட்டும் கோயிலின் நடை சாத்தப்படுகிறது.

இந்த திருத்தேரோட்டத்தில் சுந்தரேஸ்வரர் பெரிய தேரிலும், அன்னை மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளி உள்ளார்கள்.

நான்கு மாசி வீதிகளில் தேர்களில் வலம் வரும் அம்மனும் சுவாமியும் மதியம் 1.00 மணி அளவில் நிலையை அடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரும்பவும் மாலை 7.00 மணி அளவில் அம்மனும் அப்பனும் சப்தாவர்ணச்சப்பரத்தில் நான்கு மாசி வீதிகளில் வலம் வருவார்கள்.

இரு தேர்களிலும் சிவபுராணமும், திருவிளையாடற்புராணங்களும் சிற்பங்களாய் செதுக்கப்பட்டு இருக்கிறது. ஓதுவார்கள், சேந்தனார் போன்றவர்கள் திருப்பல்லாண்டு பாடியபடியே தேருடன் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

அம்மனையும் அப்பனையும் திருத்தேரில் காணக் கண்கோடி வேண்டும். தேர்கள் பல வண்ண மலர்களாலும். பல வண்ணத் துணிகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

சித்திரை மாதம் நடக்கும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வெற்றி உண்டாகும் என்பது ஐதீகம்.

தேர்களை இழுத்துச் செல்லும் வழியெங்கும் வான வேடிக்கை, கோலாட்டாம், மேள தாளங்கள் முழங்க சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் திருக்கல்யாண தோற்றத்தில் வலம் வருகிறார்கள்.

தேரை இழுக்கும் பக்தர்கள் “மீனாட்சி சுந்தர மகாதேவா” என்ற கோஷங்களை எழுப்பி தேரை இழுக்கிறார்கள்.

திருத்தேரோட்டம் அலங்காரம் இன்றைக்கு மதுரை மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் சுந்தரேஸ்வரர் பெரிய தேரிலும் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகிறார்கள்.

வண்ணமயமான பட்டு உடுத்தி இரண்டு பக்கமும் மேள தாளங்கள் சூழ மதுரை மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள்.

குழந்தைகளும் மற்றும் பக்தர்களும் பல்வேறு வேடம் அணிந்தும், நாட்டுபுறப் பாடல்கள் பாடியும், சின்னஞ் சிறு குழந்தைகள் கோலாட்டாம் ஆடியும் வரவேற்கும் காட்சிகள் கண்ணைக் கொள்ளை அடித்து வருகின்றன.

அர்ச்சனை செய்து தீபாராதனை தொட்டு கும்பிட்டு தங்கள் வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top