Connect with us

Raj News Tamil

விடுதலை 2-ஆம் பாகத்தில் விஜய்சேதுபதியின் ஜோடி யார்? இந்த நடிகையா? வெற்றிமாறன் செம பிளான்..!

சினிமா

விடுதலை 2-ஆம் பாகத்தில் விஜய்சேதுபதியின் ஜோடி யார்? இந்த நடிகையா? வெற்றிமாறன் செம பிளான்..!

சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் விடுதலை.

பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், சமூகம் ரீதியாக பல்வேறு உரையாடல்களையும் நிகழ்த்தியிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் 2-ஆம் பாகத்தை உருவாக்கும் பணியில், வெற்றிமாறன் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.

2-ஆம் பாகத்திற்காக எடுக்க வேண்டிய சில காட்சிகளையும் படமாக்கி வருகிறார். இதற்கிடையே, இந்த படம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி, விடுதலை 2-ஆம் பாகத்தில், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க உள்ளாராம்.

இதனால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்தில், ஏற்கனவே மஞ்சு வாரியர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top