Connect with us

Raj News Tamil

“2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தோல்வி நிச்சயம்”

தமிழகம்

“2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தோல்வி நிச்சயம்”

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பிரபல அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் கலந்துக் கொண்டு, சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 2024-ஆம் ஆண்டு தேர்தலில், பாஜக வெற்றி பெறாது என்று தெரிவித்தார். மேலும், கர்நாடக சட்டமன்ற தேர்தலில், பாஜக பெற்ற தோல்வியே இதற்கு சாட்சி என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், அகில இந்திய அளவில், பாஜகவுக்கு எதிரான கூட்டணி வலுவாக உள்ளது என்றும், அதற்கான முகமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார் என்றும் தெரிவித்தார்.

More in தமிழகம்

To Top