சினிமா
ஏமாற்றம் தந்த தேசிய விருது பட்டியல்! புறக்கணிக்கப்பட்ட சிறந்த தமிழ் திரைப்படங்கள்!
Published on
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மொழியிலும் எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு, மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல், நேற்று மாலை வெளியானது.
அதில், பா.ரஞ்சித் இயக்கிய சார்ப்பட்டா பரம்பரை, மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன், டி.ஜே.ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் ஆகிய படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இவ்வாறு தரமான முறையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படங்களுக்கு, ஒரு தேசிய விருது கூட கிடைக்காமல் இருப்பது, சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான தங்களது ஆதங்கத்தை, சமூக வலைதளங்களில் தமிழ் சினிமா ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Continue Reading
Related Topics:jai bhim, karnan, National Awards 2021, sarpatta parambarai, tamil movie