Connect with us

Raj News Tamil

ப்ளாக் பஸ்டர் ஹிட் தந்த தமிழ் இயக்குநர்.. ஜோடி சேரும் யாஷ்!

சினிமா

ப்ளாக் பஸ்டர் ஹிட் தந்த தமிழ் இயக்குநர்.. ஜோடி சேரும் யாஷ்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்த திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றது.

இதன்காரணமாக, நடிகர் யாஷ்-க்கு, இந்தியா முழுவதும் நடிப்பதற்கு, வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், இவர் பிரபல இயக்குநர் பி.எஸ்.மித்ரன் படத்தில் அடுத்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இரும்புத்திரை, சர்தார் ஆகிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top