Connect with us

Raj News Tamil

யாஷ் 19 படத்தின் தலைப்பு இது தான்! – வெளியான புது அப்டேட்!

சினிமா

யாஷ் 19 படத்தின் தலைப்பு இது தான்! – வெளியான புது அப்டேட்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில், வெளியான கே.ஜி.எஃப் திரைப்படதின் 2 பாகங்களும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் நடிகர் யாஷ்-க்கு, இந்தியா முழுவதும் இருந்து வாய்ப்புகள் தேடி வந்தன.

இந்நிலையில், யாஷ்-19 குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, யாஷின் 19-வது திரைப்படத்தை தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கவிருப்பதாகவும், கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் ஆக்ஷன் திரில்லராக உருவாகவுள்ள இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம், 2025-ம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top