Connect with us

Raj News Tamil

பிரபல நடிகரை திருமணம் செய்யும் நித்யா மேனன்! உண்மையான திருச்சிற்றம்பலம் கதை!

சினிமா

பிரபல நடிகரை திருமணம் செய்யும் நித்யா மேனன்! உண்மையான திருச்சிற்றம்பலம் கதை!

ஓ காதல் கண்மணி, சைக்கோ, காஞ்சனா 3, திருச்சிற்றம்பலம், மெர்சல் என்று பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளவர் நடிகை நித்யா மேனன்.

மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ள இவர், தற்போது திருமண கிசுகிசு ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது, மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவருடன், நித்யா மேனனுக்கு, விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம்.

இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக உள்ளார்களாம். இந்த தகவல் வெளியானதில் இருந்து தற்போது வரை, நடிகை நித்யா மேனன் இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை..

இது உண்மையாகும் பட்சத்தில், இந்த சம்பவம் திருச்சிற்றம்பலம் படக் கதையை உண்மையாக்கியது போல் உள்ளதாக கூறி வருகின்றனர்.

அந்த படத்திலும், சிறு வயதில் இருந்து நண்பராக இருந்த தனுஷை ( திருச்சிற்றம்பலம் ) தான் அவர் திருமணம் செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top