Connect with us

Raj News Tamil

வெங்கட் பிரபு ட்வீட்..! விஜய் ரசிகர்களுக்கு ஸ்வீட்..? இதுதான் மரண அப்டேட்!

சினிமா

வெங்கட் பிரபு ட்வீட்..! விஜய் ரசிகர்களுக்கு ஸ்வீட்..? இதுதான் மரண அப்டேட்!

பொதுவாக வித்தியாசமான திரைப்படங்களில் நடிப்பதை தவிர்க்கும் தளபதி விஜய், சமீபாகாலமாக வித்தியாசமான படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சயின்ஸ் பிக்ஷன் ஜானரில், தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும், பல்வேறு ஹிட் படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான், இப்படத்தை தயாரித்தும் வருகிறது.

இப்படம் தொடங்கியதில் இருந்து, தொடர்ச்சியாக அப்டேட்களை வெளியிட்டு வந்த படக்குழு, திடீரென ஒட்டுமொத்தமாக அப்டேட் கொடுப்பதை நிறுத்திவிட்டது. இதனால், படத்தின் அப்டேட் எப்போது வரும்? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, நிச்சயம் அப்டேட் வரும்.. அது தரமானதாக இருக்கும் எனவும் கூறியிருந்தார். அவர் கூறியதற்கு ஏற்ப, தற்போது தரமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, சில மணிநேரங்களுக்கு முன்பு, “நாளை சம்பவம் உறுதி” என்று ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனால், ரசிகர்கள் பலரும் உற்சாகம் அடைந்தனர். இவரது பதிவு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, ஏஜிஎஸ் நிறுவனம், தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில், தொடர்பான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top