Connect with us

Raj News Tamil

7வது முறையாக விஜயுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை..!

சினிமா

7வது முறையாக விஜயுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை..!

தளபதி விஜய் தற்போது லியோ படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் வெளியான பிறகு, விஜய் தனது 68-வது படத்தின் ஷீட்டிங்கில் கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம் என்றும், அதில் ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்திற்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் ஜோதிகாவிற்கு பதிலாக சிம்ரன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்-சிம்ரன் ஜோடியும் சூப்பராக இருக்கும் என்று இவர்களது ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top