Connect with us

Raj News Tamil

தடுக்கி விழுந்த விஜய்.. ரசிகரை பளாரென அடித்த புஸ்ஸி ஆனந்த்!

சினிமா

தடுக்கி விழுந்த விஜய்.. ரசிகரை பளாரென அடித்த புஸ்ஸி ஆனந்த்!

நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனை அறிந்த நடிகர் விஜய், இன்று அங்கு சென்று, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க, அங்கு சென்றார்.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரசிகர்களும், பொதுமக்களும் கலந்துக் கொண்டனர். ரசிகர் ஒருவரின் கவனக்குறைவால், இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள நடிகர் விஜய் வந்தபோது, தடுக்கி விழுந்துள்ளார்.

இதனை பார்த்த புஸ்ஸி ஆனந்த், அந்த ரசிகரின் தலையிலேயே பளாரென அடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ரசிகரை தாக்கிய புஸ்ஸி ஆனந்தையும், அவரை கண்டிக்காத விஜயையும், கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

More in சினிமா

To Top