Connect with us

Raj News Tamil

இனிமே போன்விட்டா ஆரோக்கிய பானம் இல்லையா? நடந்தது என்ன?

இந்தியா

இனிமே போன்விட்டா ஆரோக்கிய பானம் இல்லையா? நடந்தது என்ன?

சத்து பானங்கள் என்ற பெயரில், அதிக சர்க்கரை உள்ள பொருட்களை, குழந்தைகளுக்கு தருவது, இன்றைய உலகில் நாகரீகம் என்று கருதப்படுகிறது. ஆனால், இவ்வாறு அதிகப்படியான சர்க்கரை நிறைந்த உணவுகளை, தினந்தோறும் எடுத்துக் கொள்வது, ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

இவ்வாறு இருக்க, போர்ன்விட்டா உள்ளிட்ட அனைத்து பானங்களையும், ஆரோக்கிய பானம் என்ற பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என்று, ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களுக்கு, மத்திய வணிக மற்றும் தொழில் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதாவது, குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாக்கும் தேசிய ஆணையம் ( NCPCR ) , ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில், அனுமதிக்கப்பட்ட அளவை விட போர்ன்விட்டாவில் அதிகப்படியான சர்க்கரை அளவு உள்ளது என்று தெரியவந்துள்ளது.

மேலும், FSS Act 2006-ன் படியும், FSSAI & Mondelez India Food Pvt Ltd இணைந்த சமர்பித்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படியும், ஹெல்த் Drink என்ன என்பது வரையறுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத, Power Supplements-ஐ Health Drinks என்று விளம்பரம் செய்யக்கூடிய நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் ( FSSAI ) தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியிருந்தது.

அதன்பிறகு, இந்த நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணம் என்னவென்றால், ஒரு Youtuber தனது வீடியோவில், என்னென்ன பொருட்கள் கொண்டு போர்ன்விட்டா தயாரிக்கப்படுகிறது என்பதையும், அதனால் ஏற்படும் உடல் உபாதைகளையும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான பிறகே, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top