Connect with us

Raj News Tamil

பயங்கர ஒல்லியாக மாறிய ரோபோ ஷங்கர்! காரணம் இதுதானா? என்ன ஆச்சு அவருக்கு!

சினிமா

பயங்கர ஒல்லியாக மாறிய ரோபோ ஷங்கர்! காரணம் இதுதானா? என்ன ஆச்சு அவருக்கு!

சின்னத்திரையில் பிரபலமாகி, வெள்ளத்திரையில் கலக்கி வரும் ஒரு சில நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். இவர், விஜயுடன் புலி படத்திலும், அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும், தனுஷ் உடன் மாரி படத்திலும், சிவகார்த்திகேயன் உடன் மிஸ்டர் லோக்கல் படத்திலும், நடித்துள்ளார்.

தற்போது, பல்வேறு ஹீரோக்களின் படங்களில், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பார்ப்பதற்கு பயங்கர ஒல்லியாக அவர் மாறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ரோபோ ஷங்கருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அவர் இந்த அளவுக்கு ஒல்லியாக மாறியுள்ளார் என்று கருத்து கூறி வந்தனர். இந்த கருத்துக்கு தற்போது மறுப்பு தெரிவித்துள்ள ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா, தற்போது நடித்து வரும் திரைப்படம் ஒன்றிற்காக தான், அவர் இவ்வாறு உடல் எடையை குறைத்துள்ளார் என்றும், மற்றபடி உடல்நலக் கோளாறுகள் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top