Connect with us

Raj News Tamil

அரசு பேருந்தில் பயணிகளுக்கு போலி டிக்கெட் விற்பனை – நடத்துனர் பணியிடை நீக்கம்

தமிழகம்

அரசு பேருந்தில் பயணிகளுக்கு போலி டிக்கெட் விற்பனை – நடத்துனர் பணியிடை நீக்கம்

அரசு குளிர்சாதன பேருந்து ஒன்று நேற்று அதிகாலை சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு சென்றது. குளிர்சாதனப் பேருந்து ஒன்று நகரப் பேருந்தைப் போலப் பல இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் திடீரென பேருந்தில் ஏறி, பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில், பயணிகளிடம் இருந்த டிக்கெட்டுகள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டது என தெரியவந்தது.

இதையடுத்து நடத்துநரின் பையை வாங்கி பார்த்தபோது, பொதுமக்களிடம் ஏற்கெனவே விற்பனை செய்த பழைய டிக்கெட்டுகளை அவர்களிடமிருந்து வாங்கி, புதிய பயணிகளுக்கு பழைய டிக்கெட் கொடுத்தது தெரியவந்தது.

இந்த புகாரை டிக்கெட் பரிசோதகர்கள் சேலம் அரசு போக்குவரத்து கழகத்துக்கு கொடுத்த நிலையில், நடத்துநர் நேரு தற்கால பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top