Connect with us

Raj News Tamil

நயன்தாராவை தொடர்ந்து களத்தில் குதிக்கும் சினேகா..!

சினிமா

நயன்தாராவை தொடர்ந்து களத்தில் குதிக்கும் சினேகா..!

நடிகர், நடிகைகள் சினிமாவை தாண்டி பல்வேறு தொழில் தொடங்கி அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகை நயன்தாரா பல்வேறு துறைகளில் பல முதலீடுகளை செய்து தமிழ்நாடு முழுவதும் டிரெண்ட் ஆனார்.

இந்த வரிசையில் தற்போது சிநேகாவும் புது பிசினஸ் ஒன்றை துவங்கியுள்ளார். மாடர்ன் உடைகளை விட புடவையில் அழகாக இருப்பதாலோயோ என்னவோ நடிகை சினேகா, ’சிநேஹாலயா சில்க்ஸ்’ என புடவை கடையை தொடங்கியுள்ளார்.

இந்த கடை திறப்பு விழா வருகிற 12 ம் தேதி நிகழ உள்ளது. மிகவும் நெருங்கிய திரையுலக பிரபலங்களுக்கும், நண்பர்களுக்கும் மட்டும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இதனை அறிந்த திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சினேகாவிற்கு கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top