Connect with us

மேகாலயா முதல்வர் அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல்!

இந்தியா

மேகாலயா முதல்வர் அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல்!

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் அலுவகம் மீது நேற்று கற்களை வீசி பலர் தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 5 போலீசார் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேகாலயாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக கான்ராட் சங்மா உள்ளார். இதனிடையே, அம்மாநிலத்தில் உள்ள காரோ மலைப்பிரதேச பகுதியில் வசிக்கும் மக்கள் மாநிலத்தின் குளிர்கால தலைநகராக துராவை அறிவிக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துரா நகரை குளிர்கால தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பெயரில் நேற்று தனது அலுவலகத்தில் இரண்டு அமைப்புகளுடன் முதல்வர் கான்ராட் சங்மா ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

முதல்வர் அலுவலகம் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில் திடீரென்று கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். இந்த தாக்குதலில் 5 போலீசார் காயமடைந்தனர்.

இதையடுத்து கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவா்களைக் காவல் துறையினா் கலைந்து போகச் செய்தனா்.

இந்த சம்பவத்தை தொடா்ந்து துரா நகரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்று தெரிவித்தனா்.

More in இந்தியா

To Top