சினிமா
நான் நடித்த படுக்கையறை காட்சி.. குடும்பத்துடன் பார்த்தேன் – ஓபனாக சொன்ன தமன்னா
அஜித், விஜய், விக்ரம், சூர்யா என்று பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை தமன்னா. இவர், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடரின் 2-ஆம் பாகத்தில், தமன்னா நடித்து முடித்துள்ளார். பொதுவாக கிளாமர் காட்சிகளில் அதிகம் நடிக்காத தமன்னா, இந்த வெப் தொடரில், அளவுக்கு அதிகமாகவே கவர்ச்சியை அள்ளித் தெளித்துள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நடிகை தமன்னா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில்,’லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் இடம்பெற்றுள்ள படுக்கையறை காட்சிகளை எனது குடும்பத்துடன் பார்த்த போது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.
அதேபோல் அந்த காட்சிகளை படமாக்கும் போதும் எனக்கு அசௌகரியமாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் நான் ஒரு கலைஞன் என்று நினைத்து அதற்கான வேலையை மகிழ்ச்சியுடன் செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login