Connect with us

Raj News Tamil

தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்!

விளையாட்டு

தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்!

பள்ளி மாணவர்களுக்கான தேசிய ஜூடோ போட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் கலந்துகொண்ட 3 தமிழக மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அதன்படி தேசிய ஜூடோ போட்டியில் சென்னை மாணவர் தர்ஷன் பிரியன் தங்கப்பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் கொடுங்கையூர் தனியார் பள்ளி மாணவி செளமியா வெண்கல பதக்கம் வென்றார்.

தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் தமிழக மாணவர்கள் பதக்கங்கள் வென்ற நிலையில் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

More in விளையாட்டு

To Top