Connect with us

Raj News Tamil

ரூபாய் நோட்டு வடிவத்தில் துணிவு படத்தின் டிக்கெட்..!

Trending

ரூபாய் நோட்டு வடிவத்தில் துணிவு படத்தின் டிக்கெட்..!

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் துணிவு. இப்படம் வரும் 11ம் தேதி வெளியாக உள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குநர் ஹெச். வினோத் – நடிகர் அஜித் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் என்பதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

துணிவு படம் வெளியாகும் அடுத்த நாளில் விஜய் நடித்த வாரிசு படம் வெளியாக உள்ளது. இதனால் இரண்டு படங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த இரண்டு படங்களுக்கும் புரோமொஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தங்கம் திரையரங்கில் துணிவு படத்தின் முதல் காட்சி டிக்கெட்டுகளை அசல் பணத்தை போன்று அச்சடித்து அஜித் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top