Connect with us

Raj News Tamil

தலைவர் 171 திரைப்படத்தில் வில்லன் இவரா? – அதிர வைக்கும் லோகேஷ்!

சினிமா

தலைவர் 171 திரைப்படத்தில் வில்லன் இவரா? – அதிர வைக்கும் லோகேஷ்!

லியோ படத்திற்கு பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் தலைவர் 171. இந்த படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த திரைப்படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கு முன்பு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருந்தார்.

ஆனால், அப்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக, அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. தற்போது, இந்த திரைப்படத்தில் இருவரும் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top