சினிமா
விக்ரம் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து.. வெளியான தங்கலான் பட மேக்கிங் வீடியோ!
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில், உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகிறது.
இந்த படமாவது பெரிய வெற்றியை விக்ரம் என்ற உன்னதமான கலைஞனுக்கு வழங்குமா என்று அனைவரும் எதிர்பார்த்த காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், விக்ரமின் கடின உழைப்பையும், பா.ரஞ்சித் தரமான மேக்கிங்கையும் பார்த்த ரசிகர்கள், இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறி வருகின்றனர். மேலும், அப்போகலிப்டா படத்தை நினைவு கூறும் வகையில், இந்த படம் இருப்பதாகவும், சிலர் கூறி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login