Connect with us

திமிரு ஈஸ்வரி நடிகை தபு போல் உள்ளார் – இப்படி சொன்னது யார்?

சினிமா

திமிரு ஈஸ்வரி நடிகை தபு போல் உள்ளார் – இப்படி சொன்னது யார்?

ரஜினியின் தீவிர ரசிகரான நடிகை ஸ்ரேயா ரெட்டி, படையப்பாவின் நீலாம்பரி கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டே, திமிரு படத்தில் ஈஸ்வரியாக நடித்தாராம். மேலும் இவர் ரஜினி படத்தை தவிர வேறு எந்த நடிகரின் படத்தையும் பார்க்க மாட்டாராம்.

இந்நிலையில், சமீபகாலமாக இவரை பார்க்கிறவர்கள் எல்லாம், தபு மாதிரியே இருக்கீங்க என்று சொல்கிறார்களாம். ஆனால் இதனை முதன்முதலில் சொன்னவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தானாம். அதாவது, உன்னை பார்க்கும் போதெல்லாம் நடிகை தபு தான் நியாபகம் வருகிறார், அவரை மாதிரியே இருக்கிறாய் என்று ரஜினி கூறுவாராம்.

இதனை கேள்விபட்ட நெட்டிசன்கள் ‘அன்றே கணித்த நம் ரஜினிகாந்த்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

More in சினிமா

To Top