Connect with us

Raj News Tamil

மில்க் ஷேக்கிற்கு பதிலாக சிறுநீர்….ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

உலகம்

மில்க் ஷேக்கிற்கு பதிலாக சிறுநீர்….ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தை சேர்ந்தவர் வூட்ஸ். இவர் அங்குள்ள பிரபலமான ஒரு உணவு விநியோக நிறுவனத்தின் செயலி வாயிலாக மில்க் ஷேக் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் மில்க் ஷேக்-ஐ டெலிவரி செய்து விட்டு சென்றார்.

வாங்கிய மில்க் ஷேக்கை திறந்து குடித்த பின்னர்தான் வூட்ஸ்க்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதன்பிறகுதான், வந்தது மில்க் ஷேக் இல்லை என்பதும் மனிதரின் சிறுநீர் (யூரின்) என்பதை கண்டுபிடித்து இருக்கிறார். இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற வூட்ஸ் டெலிவரி செய்த நபரை அழைத்து சத்தம் போட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த டெலிவரி மேன் ஓய்வின்றி உழைத்து வருவதால் எனக்கு நேரம் கிடைக்கவில்லை. எனவே, டப்பாவில் சிறுநீர் கழித்துவிட்டு, அதை எனது வண்டியிலேயே வைத்து விட்டேன். உங்களுக்கு டெலிவரி செய்யும்போது மில்க் ஷேக்கிற்கு பதிலாக அந்த டப்பாவை மாற்றி கொடுத்து விட்டேன் என சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து உணவு டெலிவரி நிறுவனத்திடம் புகார் தெரிவித்த வூட்ஸ், பணத்தை போராடி திரும்ப பெற்று இருக்கிறார்.

More in உலகம்

To Top