Connect with us

Raj News Tamil

வணங்கான் படத்தின் அப்டேட்! வேகமாக படப்பிடிப்பை முடிக்கும் பாலா!

சினிமா

வணங்கான் படத்தின் அப்டேட்! வேகமாக படப்பிடிப்பை முடிக்கும் பாலா!

பாலா இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாக இருந்த திரைப்படம் வணங்கான். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் சென்ற நிலையில், சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் டிராப் ஆனது.

தற்போது, அந்த படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சூர்யாவை வைத்து முதற்கட்ட படப்பிடிப்பை 32 நாட்கள் எடுத்த பாலா, அருண் விஜயை வைத்து 20 நாட்களில் முடித்துவிட்டார்.

மீதமுள்ள காட்சிகளை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் படமாக்க பாலா முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top