Connect with us

Raj News Tamil

நல்ல வாய்ப்பை மிஸ் பண்ண விஜய்சேதுபதி!

சினிமா

நல்ல வாய்ப்பை மிஸ் பண்ண விஜய்சேதுபதி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய்சேதுபதி. ஹீரோவாக கலக்குவது மட்டுமின்றி, பல்வேறு படங்களில், வில்லனாகவும், மிரட்டியிருக்கிறார்.

ரஜினி, கமல், விஜய் ஆகிய முன்னணி நடிகர்கள் அனைவரது படத்திலும், வில்லனாக அசத்தியிருக்கிறார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்க உள்ள தலைவர் 171 படத்தில், வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு வந்துள்ளதாம்.

ஆனால், அந்த வாய்ப்பை, அவர் நிராகரித்துவிட்டாராம். சம்பளம் குறைவாக கொடுத்தது தான் இதற்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்று தெரியவில்லை.

More in சினிமா

To Top