Connect with us

Raj News Tamil

பிரபல நடிகருக்காக பாடல் பாடிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி!

சினிமா

பிரபல நடிகருக்காக பாடல் பாடிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி!

எஸ்.பாஸ்கர் இயக்கத்தில், வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், வி.டி.வி.கணேஷ், ஓவியா ஆகியோர் நடிப்பில், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹலோ நான் பேய் பேசுறேன்.

இந்த படத்தின் அறிமுக பாடலை, நடிகர் விஜய்சேதுபதி பாடியிருந்தார். அதன்பிறகு, எந்தவொரு படத்திலும் பாடல்கள் எதையும் பாடாமலே இருந்து வந்தார். இந்நிலையில், இவர் இன்னொரு ஹீரோவின் படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

அதாவது, நடிகர் பிரபுதேவா, வுல்ஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் மால்ட் கும்பல் என்ற பாடலை, விஜய்சேதுபதி பாடியுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

More in சினிமா

To Top