Connect with us

Raj News Tamil

விக்ரமின் அடுத்த அவதாரம் வேற மாதிரி இருக்கும் போலயே.. 200 கோடி வசூலித்த இயக்குநருடன் கூட்டணி..

சினிமா

விக்ரமின் அடுத்த அவதாரம் வேற மாதிரி இருக்கும் போலயே.. 200 கோடி வசூலித்த இயக்குநருடன் கூட்டணி..

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற படத்தில், விக்ரம் தற்போது நடித்து வருகிறார். இவருக்கு, இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விக்ரமின் அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, 2018 என்ற சூப்பர் ஹிட் மலையாள படத்தை இயக்கிய ஜூட் ஜோசப் என்பவர், விக்ரமின் அடுத்த படத்தை இயக்க உள்ளாராம்.

லைகா நிறுவனம் தான், இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிறிய பட்ஜெட்டிலேயே பெரிய வெற்றியை கொடுத்த இந்த இயக்குநர், விக்ரம் போல் மாஸ் நடிகர் கிடைத்தால், என்ன செய்வாரோ என்று, ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More in சினிமா

To Top