Connect with us

Raj News Tamil

சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!

விளையாட்டு

சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின். ஒரு காலத்தில் இந்தியாவின் தூணாக இருந்த இவர், பல்வேறு கிரிக்கெட் வீரர்களையும், இந்திய அணிக்காக உருவாக்கியுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால், தோனியின் கிரிக்கெட் பாதையில், சச்சினுக்கும் முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு பல்வேறு பெருமைகளை கொண்ட சச்சின், 49 சதங்களை ஒருநாள் போட்டிகளில் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கூறப்பட்டது. ஆனால், அந்த சாதனையை விராட் கோலி, இன்றைய ஆட்டத்தில் முறியடித்துள்ளார். அதாவது, உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில், இந்தியாவும், நியூசிலாந்தும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்தியா, அதிரடி ஆட்டத்தை காட்டி வருகிறது. இதற்கிடையே, விராட் கோலியும், சிறப்பாக விளையாடி 117 ரன்களை எடுத்து, தனது 50-வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இதன்மூலம், சச்சினின் மிகப்பெரிய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சச்சின் தனது வாழ்நாள் முழுவதும் செய்த சாதனையை, விராட் கோலி, விரைவில் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in விளையாட்டு

To Top