Connect with us

Raj News Tamil

மணிப்பூர் பெண்களுக்கு பாஜக என்ன பாதுகாப்பு அளித்துள்ளது? மல்லிகார்ஜுன கார்கே!

இந்தியா

மணிப்பூர் பெண்களுக்கு பாஜக என்ன பாதுகாப்பு அளித்துள்ளது? மல்லிகார்ஜுன கார்கே!

தல்கடோரா அரங்கில் மகிளா காங்கிரஸ் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மணிப்பூர் பெண்களுக்கு பாஜக என்ன பாதுகாப்பு அளித்துள்ளது? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கட்சியின் பெண் தலைவர்கள் கடுமையாக உழைத்து 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை ஒழித்துக்கட்டுவோம். ராகுல் காந்தியால் மணிப்பூர் செல்ல முடியும் என்றால், பிரதமர் மோடியால் ஏன் அங்கு செல்ல முடியாது?

மணிப்பூர் பெண்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள், வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். அங்குள்ள பெண்களுக்கு பாஜக என்ன பாதுகாப்பு அளித்துள்ளது?

ஆனால் இதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் மற்ற மாநிலங்களில் பாஜக பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான யோசனைகள் மற்றும் உத்திகள் குறித்து எங்கள் கட்சியின் மகளிர் குழுவினர் விவாதிப்பார்கள். அடுத்தாண்டு அவர்கள் பாஜக அரசை ஒழித்துக் கட்டுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

மணிப்பூரில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்துப் பேசுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம், ஆனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த பின்னரே அவர் பேசினார்.

மணிப்பூரில் பல உயிர்கள் பலியாகின, பல வீடுகள் எரிக்கப்பட்டன, ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர், ஆனால் பிரதமர் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை என கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

More in இந்தியா

To Top